சமூக ஊடகங்களில் இலங்கையர்

339

எம் அனைவருக்கும் தெரிந்த வகையில் சமூக ஊடகங்கள் இணையத்தின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கின்றன. நீங்கள் அது எவ்வளவு முக்கியமானது என கேட்கலாம். nextweb.com என்ற இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி இணையத்தளத்தினை உபயோகிக்கும் அனைவரும் பாவிக்கும் ஒரு முக்கிய அம்சமாக சமூக ஊடகங்கள் முதல்நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையர் ஆகிய நாம் சமூக ஊடகங்களோடு எவ்வகையில் தொடர்புபடுகிறோம் என்பது ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான கேள்வி ஆகும். இதற்காகவே நாம் Loop Solutions  என்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்து கடந்த சில மாதங்களாக ஒரு சமூக ஊடக கணக்கெடுப்பை நடாத்தினோம்.

குறிப்பிட்ட காலவேளையில் அந்த கணக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது, அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் இதோ வாசகர் நன்மைக்காக. உங்களிடம் ஒரு நல்ல இணைய இணைப்பு இருப்பின் கீழே உள்ள வீடியோ காணொளியை பாருங்கள், இல்லாதவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

[youtube]http://www.youtube.com/watch?v=2mIG48Mw2wI[/youtube]

முதலாவதாக நாம் மொத்த பாவனையாளர்களை பார்ப்போம். இலங்கையை பொறுத்த வரையில் எத்தனை முகப்புத்தக பாவனையாளர்கள் உள்ளார்கள்??

போலி முகப்புத்தக கணக்குகளை தவிர்த்துப்பார்க்கும் போது இலங்கையில் 2,300,000 பாவனையாளர்கள் இருக்கிறார்கள். ஆம் இலங்கயின் மொத்த சனத்தொகையின் 11.5% ஆனோர் முகப்புத்தகத்தினை உபயோகிக்கிறார்கள். அவற்றில் 1,400,000 ஆண்களும் 720,000 பெண்களும் அடங்குவர். 25 வயதிற்கும் 34 வயதிற்க்கும் இடைப்பட்டோர் இம்முகப்புத்தகப் பாவனையாளர்களின் மொத்தத்தில் 33% இனை நிரப்புகின்றனர்.

Married couples

இவற்றை விட 42 வீதமானோர் இரு மொழிகளில் தொடர்புகளை மேற்கொள்கின்றனர், 38 வீதமானோர் ஒரு நாளைக்கு 8 முறை தமது முகப்புத்தக கணக்கை பார்வையிடுகின்றனர், 25 வீதமானோர் தமது தாய் தந்தையருடன் நண்பராக உள்ளனர். 36 வீதமானோர் தமது முதலாளிகளுடனும் 60 வீதமானோர் தமது முன்னாள் காதலன் அல்லது காதலியுடனும் நண்பராக இருக்கின்றனர்.

ஒரு நாளுக்கு ஒரு இலங்கையன் எவ்வளவு நேரம் முகப்புத்தகத்தோடு செலவிடுகிறான் என்பதை பற்றி துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை ஆனாலும் அண்ணளவாக 34 நிமிடங்கள் செலவளிக்கின்றான். ஆம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 34 நிமிடங்கள்.

கைத்தொலைபேசி இன் வருகயுடன் முகப்புத்தக பாவனை மேலும் அதிகரித்துள்ளது. 1.300.000 முகப்புத்தக கணக்குகள் கைத்தொலைபேசியூடாகவே அணுகப்படுகின்றன. ஆம் மொத்த பாவனையாளர்களின் 58 வீதம். இதைவிட 8 வீதமானோர் வாகனம் செலுத்தும்போது முகப்புத்தகம் மற்றும் ட்விட்டர் பாவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கைத்தொலைபேசி இயங்குதளங்களை பொறுத்த வரையில் அண்ட்ரொய்ட் 400,000 பாவனையாளர்களோடு முதலிடத்தில் உள்ளது. iOS 100,000  பாவனையாளர்களையே கொண்டுள்ளது. சந்தையில் மிகக்குறைந்த விலையில் அண்ட்ரொய்ட் கைத்தொலைபேசிகள் வந்துவிட்டது இதற்கான ஒரு காரணம் ஆகும்.

சமூக ஊடகங்கள் முக்கியமாக முகப்புத்தகம் மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுகையில் எவ்வாறு முன் நிற்கின்றது? ஆம் 49 வீதமானவர்கள் TV  ஐ ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே பார்வையிடுகின்றனர். 28 வீதமானவர்கள் மட்டுமே பத்திரிகை படிக்கின்றனர்.

tv

அதுமட்டுமன்றி சமூக ஊடகங்களில் விளம்பரத்தை பிரசுரிக்க முற்படும் போது ஏற்படும் செலவு மற்றைய Traditional Media  ஐ உபயோகிக்கும் போது ஏற்படும் செலவை விட மிகக்குறைவாகும். பத்திரிகை ஐ பொறுத்தவரையில் 50 சதமும் டிவி ஐ பொறுத்த வரையில் 2 சதமும் செலவாகும். ஆனால் இணையத்தில் விளம்பரத்தை பிரசுரிக்க வெறும் ¼ சதமே செலவாகும். 71 வீதத்திற்க்கும் மேலானவர்கள் முகப்புத்தகம் மூலம் விளம்பரம் செய்தலே மிகவும் பயனுள்ளது எனக்கருதுகின்றனர்.

Banner ads

முகப்புத்தகம் பற்றி பேசப்போனால் ஒரு பாவனையாளர், ஒரு நாளைக்கு சராசரியாக 17 Pages ஐ பார்வையிடுகிறார். அவற்றில் 85 வீதமானவை உள்ளூர் உற்பத்திகள் பற்றியவை. அவற்றில் 35 வீதமானவர்கள் 15 க்கும் மேற்ப்பட்ட உற்பத்திகளை Follow  செய்கின்றனர். 45 வீதமானவர்கள் கூறுகையில் தமக்கு தேவையான தகவல்களை குறிப்பிட்ட உற்பத்தியின் வலைத்தளத்திற்க்கு செல்லவேண்டிய தேவையின்றி முகப்புத்தக பக்கங்கள் மூலமாகவே பெற்றுக்கொள்ளக்கூடியதாக தெரிவிக்கின்றனர். இப்படியே தொடருமானால் வலைத்தளங்களின் தேவை இல்லாமல் போய்விடுமோ என்றும் பயப்பட வேண்டி உள்ளது. 78 வீதமான கொள்வனவு செய்பவர்கள்  தமது கொள்வனவில் நல்ல முறையில் ஆதிக்கம் செலுத்தியமைக்காக தாம் முகப்புத்தகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

மக்கள் எவ்வாறு அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளோடு தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றார்கள் என்று பார்ப்போமானால், 85 வீதமானோரின் பதில் சமூக ஊடகங்கள் என்பது தான். ஆம் அவற்றிலும் மிகவும் பிரபலமான பதில் Whatsapp.

chat

இத்துடன் இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் முடிவடைகின்றது.

இந்த தகவல்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அடுத்த 12 மாதங்களில் இது எவ்வாறு மாறுபடும்?

கீழே உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here